நான் பார்த்த வரையில் பெண்கள் சிறுமியாகி விடுகிறார்கள். அம்மா, சித்தி, பாட்டி, அத்தை என நான் பார்த்த பெண்கள் விசேஷதிற்கு சென்று வந்த மதியத்தில் நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி பேழைக்குள் வைக்கையில் சிறுமியாகி விடுகிறார்கள். ஆரம்பத்தில் பத்து பெட்டிகளில் அடுக்கியதிலிருந்து, நாங்கள் வளர வளர பள்ளிக் கட்டணம், வீட்டுச் செலவு என கொஞ்ச கொஞ்சமாக அது ஒரு பெட்டியாகும் வரையில் ஒவ்வொரு முறையும் அம்மா சிறுமிதான். அதனால் தானோ என்னவோ நானும் என் புதையல்களை பேழைக்குள் வைக்கும் போதெல்லாம் சிறுவனாகிவிடுகிறேன். ஒரு புத்தகம் வாசித்து பத்து நாட்களுக்குமேல் அது மனதில் ஏதோ ஒரு தொந்தரவை தந்தபடியே இருந்தால் இங்கு வந்து பதிவுசெய்துவைத்துக்கொள்கிறேன். ஒன்று இது என் பேழை. இரண்டு, திருச்செந்தாழை போன்ற எழுத்தாளர்களின் கணமான ஆழமான கதைகளை சுமந்துக்கொண்டே வாழவும் முடியவில்லை, ஒரேயடியாக தூக்கி தூரத்தில் வைக்கவும் முடியவில்லை. பேழைக்குள் போட்டு வைப்போம், தேவையானபோது சிறுவனாகமாறி எடுத்து அணிந்துக்கொள்வோம் என எண்ணி சமீபத்தில் திருச்செந்தாழையின் கதைகள் வாசித்த அனுபவத்தை இங்கு இறக்கிவைக்கிறேன். எங்கள் வாசகர்வட்டம் எனக்கு முற்றிலுமாக...
- Get link
- X
- Other Apps